


தெய்வேந்திரம் அண்ணையின் மறைவு செய்தி கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன் , கலைத்துறையில் அவருடன் எனக்கு தொடர்புகள் பல அமைந்திருந்தது.அன்பானவர், பண்பானவர், அமைதியானவர், அனைவரையும் மதிக்க தெரிந்தவர்.ஆரம்பகாலங்களில் பாரிஸ் தமிழ் வானொலியில் எனது கவிதைகளை நயம்பட சுவைத்து வாசித்துள்ளார், அவரின் குரல்வளம் அத்தகையது.அவர் வழங்கிய ஒளி நாடாக்கள் அவரை நினைவூட்டும் முகமாக என்னிடம் இருக்கும் என்பது திண்ணம் . அவரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனிடம் பிரார்த்திப்பதோடு அவரை இழந்து நிற்கும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர ஆண்டவன் அருள் புரிய வேண்டும். " வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " சாந்தி, சாந்தி, சாந்தி -நல்லை கண்ணன் -