Clicky

தோற்றம் 22 AUG 1950
மறைவு 21 JAN 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் (வண்ணை தெய்வம்)
வயது 70
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம் 1950 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

எம் குருநாதன் பாரிஸ் (Paris ) இளையநிலா இசைக்குழு இயக்குனர் 25 JAN 2021 United Kingdom

சக கலைஞர்களை அனபாக மதித்து நடந்தவரும் கலையின்பால் அதீத அன்பு கொண்டவரும் நாடகம் ,எழுத்து ,நடிப்பு ,கவிதை பேச்சாற்றல் என பல்துறை திறமைகளை தன்னகத்தே கொண்ட ஈழத்தமிழ்விழி திரு வண்ணை தெய்வேந்திரம் அவர்களின் இழப்பு கலையுலகில் ஒரு மறக்கமுடியாத இழப்பாகும் . வண்ணை தெய்வம் அவர்களுடன் நான் தாயகத்திலிருந்ததே பழகி பின்னர் இடம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்த காலங்களிலும் ஒன்றாக பல கலைப்பயணங்களையும் தனிப்பட்ட நட்புகளையும் பேணி வந்தேன் . அவரது இழப்பு என்னை மட்டுமல்ல சக கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . என்ன செய்வது இவ்வுலகில் அவதரித்தவர்கள் என்றோ ஒருநாள் இறைவனடியை அடைந்தேயாகவேண்டுமென்பது நியதி அந்த வகையில் வண்ணை தெய்வம் அவர்களும் இறைவனடியில் ஓய்வு பெறுகின்றார் . அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,கலைஞர்களுக்கும் ஆறுதலைக்கூறிக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி ???? பாரிஸ் இளையநிலா இசைக்குழு சார்பாக குருநாதன்