1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1944
இறப்பு 24 MAY 2021
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி (லலிதா)
வயது 76
அமரர் கிறிஷாந்து லூர்துமேரி 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, மன்னார் உயிர்த்தராசங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிறிஷாந்து லூர்துமேரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது? என்
நினைவிலும் மறக்கமுடியவில்லை!

அம்மா! உன் இனிமையான
நினைவுகளை நினைக்கும் போது
நிலைகுலையச் செய்யுதம்மா!!
 நேற்று போல் இருக்கிறது உன்
நெஞ்சகலா அந்நினைவு!

நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே ஏன் என்னை
மறந்தாய் அம்மா! எங்கும் நிழலாய்
பின்தொடர்ந்தாய்- இப்போது பாதிவழி
விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?

அன்பிற்கே சாவு என்றால்
அகிலம் என்னாவது? என்னுயிரே
வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்

அன்பு பண்பு பாசத்தோடு
நல்ல மனைவியாய் வாழ்ந்த வாழ்கையை
எண்ணி மனம் மாய்ந்து துன்பத்தில்
துவண்டு துவள்கிறேன்

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
எங்களுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே... 

உங்கள் பேரப்பிள்ளைகளை
 பெற்ற பிள்ளைகள் போல்
தாலாட்டி வளர்த்தாயே
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
அழுத கண்கள் வரண்டு ஆண்டொன்று
போய்விட்டது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்......

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 26 May, 2021
நன்றி நவிலல் Wed, 23 Jun, 2021