11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் மனோன்மணி
1956 -
2015
பெரியகல்லாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் கொடுத்து உளம் புதைத்து
வளம் பெருக்கி வாழ்வு காட்டி
சிரித்த முகத்தோடு சினக்காத விழியோடும்
அன்பின் இருப்பை ஆளுமையுடன் வாழ்ந்துகாட்டிய
அருமைத் தெய்வம் எங்கள் அம்மா!!
அம்மாவை இழந்து ஆண்டுகள்
பதினொன்று ஆனதுவே...
அரவணைத்து அன்பு காட்டிய இதம்
என்றும் எம் இதயத்திலும் உடலிலும்
உணர்வாகக் கலந்து நிற்குதம்மா...
தெய்வத்துள் கலந்துவிட்ட எம் குடிகாக்கும்
தெய்வம் அம்மா!!
அப்பப்போ தேம்பும் மனதை உங்கள் நினைவுகளால்
ஆறுதல் படுத்துகிறோம்!!
எம் குடும்பத்தில் நல்நிகழ்வுகள் நடைபெறும்
நேரமெல்லாம் அருகிருந்து வாழ்த்துவதாய்
அனைவரும் உணர்கிறோம் அம்மா!
என்றும் உறுதுணையாய் நீங்கள் நிற்க
உளமுருகி வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்