யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா, France Paris ஆகிய இடங்களை வதிவிடமாவும் கொண்டிருந்த அமரர் சந்திரா வலன்ரைன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்களைப் பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உங்களை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
அருகிலிருந்து ஆறுதல் தர
நீங்கள் இங்கு இல்லை இன்று
எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து
தெய்வமாய் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!!!