யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா, France Paris ஆகிய இடங்களை வதிவிடமாவும் கொண்டிருந்த அமரர் சந்திரா வலன்ரைன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உங்கள் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தீர்கள் அம்மா…!
நீங்கள் இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உங்கள் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
அமைதிபெற்ற உங்கள் ஆன்மா
இறைவன் இல்லத்தில் இளைப்பாற வேண்டுகின்றோம்!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்