
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா, France Paris ஆகிய இடங்களை வதிவிடமாவும் கொண்டிருந்த அமரர் சந்திரா வலன்ரைன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’
தாய்க்கு வரைவிலக்கணமே நீங்கள்தானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தீர்களே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
மூன்றாண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி
என்றும் உங்கள் மீளா நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!
அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்.
பிறப்பு, இறப்பு இரண்டும் வாழ்வில் இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
நித்திய அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்...
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +41764184146