Clicky

பிறப்பு 19 MAY 1966
இறப்பு 26 OCT 2024
அமரர் பாஸ்கரதாஸ் ரவிசங்கர்
வயது 58
அமரர் பாஸ்கரதாஸ் ரவிசங்கர் 1966 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சந்திரசேகரன் (சேகர் அண்ணா) கொழும்பு. 29 OCT 2024 Sri Lanka

என் உடன்பிறவா தம்பி சின்ன ரவியின் திடீர் மறைவுச் செய்தி எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவனது கனிவான பேச்சும் எந்நேரமும் காணும் சிரித்த முகமும் எம் நெஞ்சை விட்டு அகலாது. அவனுடன் கழித்த மறக்க முடியாத பொழுதுகள் இனியவை. அடிக்கடி தொலைபேசியில் சேகர் அண்ணா சேகர் அண்ணா அவன் அழைக்கும் குரல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எல்லோருக்கும் உதவி செய்யும் அவனது குணம் எவருக்கும் வாய்ப்பது அரிது. இனி அந்தக் குரலைக் கேட்க முடியாது, அவன் முகத்தைக் காண முடியாது என்று எண்ணவே நெஞ்சமெல்லாம் வேதனை அளிக்கிறது. அன்பான அவனது மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லும் வகை நான் அறியேன். அம்பாள் அவன் ஆத்மா சாந்தி அடைய அருள் புரிவாராக. அவனது பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Tributes