31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 APR 1946
இறப்பு 18 MAY 2021
திருமதி பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி 1946 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!

உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் No. 36 Avenue de la Division Leclerc93000 Bobigny, France எனும் முகவரியில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்