திதி: 06-06-2022
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து
எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆலமரமாய் நீங்கள் எங்களை
அரவணைத்தீர்கள்
விழுதுகளாய் நாம் இருந்தோம் அம்மா!
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்களின் உள்ளத்து நினைவலைகள்
இன்னும் ஓயவில்லை அம்மா!
ஆசைகள் காட்டியா எங்களை
வளர்த்தீர்கள் அம்மா
இல்லையே
பாசத்தையே
காட்டியெல்லோ எங்களை
வளர்த்தீர்கள் அம்மா!
இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக வேண்டும் அம்மா
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..... திரு திருமதி (ச. வி.) கிருபாரகரன், பாரிஸ், பிரான்ஸ்