

-
28 APR 1946 - 18 MAY 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Garges, France
திதி: 26-05-2023 வளர்பிறை சஷ்டி திதி
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் இல்லத்தில் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று நினைவஞ்சலி பிரார்த்தனை நடைபெறும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..... திரு திருமதி (ச. வி.) கிருபாரகரன், பாரிஸ், பிரான்ஸ்