யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 22-02-2025 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதியபோசனமும் ந.ப 11.30 மணியளவில் புதிய லட்சுமி மண்டபம் 195A, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல 25/3, கோணவளை லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
24.02.2025 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக நெற்கொழு வையிரவர் மற்றும் வல்வெட்டியில் உள்ள பத்தினி அம்மான் ஆலயத்திலும் விஷேச அபிஷேகங்கள் நடைபெற உள்ளதால் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 01-03-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Rue des arpenteurs 2, 1217 Meyrin எனும் முகவரியில் நடைபெற்ற உள்ள மதியபோசன நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Rue des arpenteurs 2,
1217 Meyrin
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.