
திதி : 18-09-2025
பிரான்ஸ் Bondy ஐப் பிறப்பிடமாகவும், Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அபிராமன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே அபிராமன்...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது சோகமம்மா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...!!!
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.