திதி:05/09/2025
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயன் மயில்வாகனம் அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க கண்டது
எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
முப்பது இரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர் இப்பிறவி அல்ல
எப்பிறவியிலும் எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்...
சதீஸ்(மகன் -கனடா), ச.சந்திரிக்கா, சாருயா, சபிஷா(பேரப்பிள்ளைகள்),
ரவிந்திரன்(மகன் -இலங்கை), ர.ஞானேஸ்வரி,
மயூரதன், ரசிக்கா, துவிஸ்கரன்(பேரப்பிள்ளைகள்),
தி.அக்ஷயா(பூட்டி)
றமேஸ்(மகன் -இலங்கை), ற.கயல்விழி, அஜய், அஸ்வின், அஸ்ரிகா(பேரப்பிள்ளைகள்)
திலிப்(மகன் -கனடா), தி.பானுயா, கர்ஷன், ஆருஷன், அஜிஷன்(பேரப்பிள்ளைகள்)