Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 24 AUG 1943
இறப்பு 29 AUG 1993
அமரர் ஐயன் மயில்வாகனம்
ஒய்வுபெற்ற புகையிரத சேவையாகளின் மேற்பார்வையாளர்
வயது 50
அமரர் ஐயன் மயில்வாகனம் 1943 - 1993 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயன் மயில்வாகனம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அப்பா அழியாத ஓவியமே
ஆண்டுகள் இருபத்தி ஏழு ஆகியதோ
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எமக்கு பசு மரத்தாணி போல்
பதித்து விட்டது அப்பா உங்கள் நினைவுகள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை
உலகில் யார் தரமுடியும் அப்பா!

ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுகளே!
அந்த நினைவுகளை நிஜமாக்க தங்களை காண
உங்கள் வடிவில் மிடுக்காய் ஒரு சிலை
செதுக்கி நிறுத்தி விட்டேன் அப்பா!

அம்மாவுக்கு பாதுகாப்பாவும் எங்களுக்கு நல் வழிகாட்டியாய்!
இன்று உங்கள் நினைவு நாளில் உங்கள் உருவசிலையை
நிறத்தி விட்டேன் உங்கள் மகன் என்பதில் நான்
பெருமை கொள்கிறேன் அப்பா

உங்கள் ஆறாத்துயரில் வாடும் உங்கள்
மகன் இராசகுமார், அம்மா, பிள்ளைகள்.

அப்பா உங்கள் ஆத்மா அமைதி பெற கண்ணீர் பூக்கள்
சொரிந்து கடவுளை பிராத்திக்கிறோம்.  

தகவல்: சதீஸ்(மகன்- கனடா)