யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி சோமசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்புத்தெய்வம் இறைபதமடைந்த செய்தியறிந்து பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்தவர்களுக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில் நேரில் வரமுடியாமல் இருந்தும் எங்களுடன் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் அனுப்பியவர்களுக்கும், பல சிரமங்களுக்கு மத்தியிலும் தக்க தருணத்தில் வாசல்வரை வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவிக் கரம் நீட்டியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சமர்பித்தவர்களுக்கும், எமது குலவிளக்கின் இறுதி மரியாதையில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், அந்தணப்பெருமக்களுக்கும் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.