1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
1939 -
2021
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருந்தவநாயகி சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறோம்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்