திதி: 18-01-2023
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருந்தவநாயகி சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! அம்மா!
உங்கள் இனிய குரல் எங்கள்
காதில் ஒலித்துக்கொண்டிருக்குதம்மா!
ஆண்டுகள் மூன்றானதம்மா எமை
விட்டு நீங்கள் மறைந்து ...
அம்மா எங்கள் ஆருயிரே நீங்கள்
எங்கே? உங்கள் திருமுகம்,
அமைதியே நிறைந்த கண்கள்,
அன்புடன் பேசும் பேச்சு,
இரக்கம் கொண்ட உள்ளம் உன்போல்
துணையிருப்பார் இந்த உலகில்
எமக்கில்லை அம்மா!
இன்று ஐயாவையும் பிரிந்து நாங்கள்
தவிக்கின்றோம்!
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உங்கள் இருவரையும்
பிரிந்து
வாடுகின்றோம்!
கணப்பொழுதில் எல்லாம் நடந்துவிட்டது
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று,
ஆண்டுகள் பல
உருண்டாலும்
ஐயா, அம்மா
உங்கள் அன்பு
நினைவுகளுடன்
நாம் வாழ்வோம்...
உங்கள் ஆத்மா சாந்தி பெற
எல்லாம் வல்ல
சிற்பனை முருகனை
வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி....