2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருந்தவநாயகி சோமசுந்தரம்
1939 -
2021
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
37
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருந்தவநாயகி சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாது உங்கள் ஞாபகங்கள்
உங்களை இழந்த வலியுடன் இன்று
நாம் ஐயாவையும் இழந்து மௌனமாய் தவிக்கின்றோம்!
நீங்கள் இருவரும் இல்லாத வீடு
இன்று களை இழந்து இருக்கின்றது
அம்மா உங்கள் அன்பான பேச்சும்
அரவணைப்பும் இழந்து தவிக்கின்றோம்!
நம்ப முடியவில்லை இன்றளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை....
காலங்கள் போகலாம் காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உங்கள் நினைவுகள்
என்றும் எமை விட்டு நீங்காது அம்மா!
ஐயாவுடன் இணைந்து எங்களை
வழி நடத்துங்கள் அம்மா....
உங்கள் ஆத்மா சாந்தியடைய சிற்பனை முருகனை வேண்டுகின்றோம்.
உங்கள் நினைவுகளை காலமெல்லாம் சுமந்து நிற்கும் பாசமிகு குடும்பத்தினர்...!
ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்