2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
கருணா மெட்ரஸ் உரிமையாளர்- கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா உறுப்பினர், கதிர்காம யாத்திரிகர் தொண்டர்சபை ஆயுட்கால உறுப்பினர்
வயது 84

அமரர் அப்புக்குட்டி கந்தசாமி
1936 -
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புக்குட்டி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் ஊற்றாய்
பாசத்தின் திருவுருவாய்
ஆலமரமாய் வாழ்ந்து
அன்பு நிழல் அளித்தீரே!
ஆணி வேரே சாய்ந்த பின்
ஆறுதல் தருவது யாரோ!
கண்கள் கலங்குகிறதே
காற்று வீச மறுக்கிறதே!
உம் மறைவுதனை எண்ணி- எம்
நெஞ்சம் வெடித்து
விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள்
பாதங்களில் பூவாய்த் தூவுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்