யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கந்தசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரத்தினம், காலஞ்சென்ற இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன்(லண்டன்), இராஜகருணா(லண்டன்), சந்திரகருணா(கொழும்பு), டேவிகா(பிரான்ஸ்), லேணுகா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோதினி(லண்டன்), இளமதி(லண்டன்), தாரகா(கொழும்பு), பிரசன்னா(பிரான்ஸ்), ஜகீதன்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், நேசம்மா, காலஞ்சென்ற தனபாலசிங்கம், மங்களேஸ்வரி, இராஜகுலசிங்கம், யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பூமணி, காலஞ்சென்ற அம்பிகாநிதி, தனலட்சுமி, செல்வநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
திவ்யா, ஹரிணி, பிரணவி, மிதுலேஸ், மிதுன்யா, தருகேஷ், யதுர்ஷா, சப்தனா, சஜனா, பிரணிகா, ஈஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-02-2021 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.