Clicky

பிறப்பு 29 AUG 1934
இறப்பு 30 JAN 2021
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா
தொழில் நுட்ப உத்தியோகத்தர் முல்லைத்தீவு
வயது 86
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா 1934 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore

கண்ணீர் அஞ்சலி

ச. இராசேஸ்வரன் - கனடா 31 JAN 2021 Canada

அமரர் திரு அ. புஸ்பராசா அண்ணர் அவர்கள் தண்ணீரூற்றில் எங்களது வீட்டிற்கு மிக அண்மையாக வாழ்ந்து வந்தவர். மிகவும் அமைதியும் சாந்தமும் நல்ல பண்புகளும் உடைய ஓர் சிறந்த மனிதராவார். நானும் அவரும் ஒரே காரியாலயத்தில் அரச கடமையாற்றினோம். அவர் வேலையில் மிகுந்த நேர்மையோடு செயற்படும் ஒரு சிறந்த சேவையாளன். அவரோடு வேலை செய்த நாட்கள் மிகவும் இனிமையானவை. அவரோடு வேலை செய்த காலங்களை இப்போதும் நினைத்துப் பார்ப்பது உண்டு. என்னோடு எனது கடமைகளுக்கு மிகவும் உறுதுணையாகவும் பொறுப்போடும் செயற்பட்ட மகத்தான மனிதர். அன்னாரது இழப்புச் செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைகின்றேன். அவரை இறுதிப்பயணத்தில் ஒரு தடவையாவது பார்க்கமுடியாதிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அன்னாரது பிரிவுத்துயரில் கலந்துள்ள மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கம் எனது அழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.