யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:16/12/2023.
வருடங்கள் நகர்ந்து செல்ல செல்ல
நாட்காட்டியை பார்த்தபடி
உங்களுடன் கழித்த நாளிது....
கடிகார நொடி நகர்தலை பார்த்தபடி
உங்களருகில் அமர்ந்த நிமிடமிதுவென....
ஆனந்தமாய் அக்களித்த கணங்களுக்கு
சிதைந்த மனதுடன் கண்ணீரால்
அஞ்சலிக்கிறேன்.......
வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப்
போனதே இன்று....
அனாதையாய் தவிக்கவிட்டு
சென்றுவிட்டீர்களே என் உயிரே .....
கடைசிவரை கூட இருப்பீர்கள் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று.....
கடந்து விட்டீர்கள் என்னை தனியாய் விட்டு....
அன்பானவரே உங்கள் முகம்
காண துடிக்கின்றேன்.....
மனம் ஏங்கித் தவிக்கிறது
உங்களை காண....உங்கள் குரல் கேட்க....
காரணம் தெரியவில்லை.....
மனதுக்கு நீங்கள் இல்லையென்று
புரியவில்லை......
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
என் மனம் உங்களைத்
தேடிக் கொண்டே இருக்கும்-
என் மரணம் வரை......
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் அன்பு மனைவி.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sithi, Mohana & Nanthana Family from UK.
உன்னைப் பற்றி நான் நினைக்காமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என் செல்ல தம்பி. கொடூரமான கடவுள் உன்னை மிக விரைவில் அழைத்துச் சென்றார்....