யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 27-11-2022
ஆண்டொன்று மறைந்து விட்டது!
அகலுமா பிரிவின் சோகம்...
மறையுமா நினைவின் பாசம்...
காற்றாகி போனதுவா தேகம்...
காலத்தால் மறைந்திடுமோ உங்கள் நேசம்..
நீங்கள் என்னை விட்டுபிரிந்த நாள் முதல்
நான் உயிரைப் பிரிந்த உடலாய் அலைகின்றேன்..
உம் விதியோ! அல்லது என் விதியோ!
தலையெழுத்து தவறியது...
கண்பட்டுக் கலைந்து போனது எமது வாழ்வின் நிஜங்கள்..
காணாமல் உமை மறைத்துவிதி செய்த சதிகள்..
உங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும் திரும்பி வரமாட்டீர்களா?
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும் என் முன் நிற்கின்றீர்கள்!
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்உங்களைத் தேடுகின்றேன்..
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில் பூவாய்த் தூவுகின்றேன்..
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Sithi, Mohana & Nanthana Family from UK.