3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
        
            
                அமரர் அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம்
            
            
                                    1944 -
                                2019
            
            
                சங்கானை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது மூன்று வருடம்
எண்ணிய போது ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர் 
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
My Periyammah was such a lovely women. She was someone whose light shown on everyone around her. That light is deeply missed. I love you perriyammah and am truly sorry for your loss Rest In Peace