யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
”உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே;
என்னை
நம்புகிறவன் இறந்தாலும் வாழ்வான்”[-யோவான் 11:25]
அம்மா...
ஒரு வருடம் கடந்துவிட்டது,
ஆனால் நீங்கள் சென்ற அந்த நாளின்
வலி இன்னும் குறையவில்லை....
”அம்மா” என்று அழைக்க
என் உதடு துடிக்கிறது- ஆனால்
பதில் சொல்ல நீங்கள் அருகில் இல்லை
என்பதே என் இதயத்தை உடைக்கிறது..
நீங்கள் என்னை விட்டுச் சென்ற நாள்
என் வாழ்க்கையின் முடியாத வெறுமையை தந்துவிட்டது.
உங்களை மறக்கச் சொல்ல காலம்
முயற்சி செய்கிறது- ஆனால் அம்மா
என் இதயம் அதை ஒருபோதும்
ஏற்க மறுக்கிறது.
மரணம் என்றால் என்ன?
அது எந்த அளவிற்கு வலிக்கும் என்பதை
இப்போது தான் நான் அதிகமாக உணர்கிறேன்
உங்கள் சிரிப்பு
உங்களின் அன்பான வார்த்தைகள்
என்னை வளர்த்த விதம்
என்னை அழைத்த அந்த குரல்
எதையும் என்னால் மறக்க முடியவில்லை அம்மா....
என்னை தாலாட்டிய உங்கள் கைகள்,
என்னை காத்த உங்கள் பிரார்த்தனைகள்,
என்னை நேசித்த உங்கள் இதயம்,
இப்போது ஆண்டவரின் சமாதானத்தில்
ஓய்வெடுக்கிறது.
ஆண்டவரே!
எனது அம்மாவை உமது
நித்திய சமாதானத்தில் வைத்தருளும்
உமது ராஜ்யத்தில் அம்மா
ஆனந்தமாக இருக்கட்டும்...
நீங்கள் என் கண்களுக்கு
தெரியாமல் போனாலும்
என் செபத்திலும் நினைவுகளிலும்
என்றும் வாழ்கிறீர்கள்...
”உங்கள் நினைவுகள்
என்றும் என்னுடன்”