Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 OCT 1929
இறப்பு 13 JUL 2010
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை (அன்ரன் மாஸ்ரர்)
இளைப்பாறிய தலைமை ஆசிரியர்
வயது 80
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை 1929 - 2010 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை நாரந்தனையை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.  

காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.