யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை நாரந்தனையை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அகல் விளக்கே
எங்கள் குடும்பம் என்னும் கோட்டையில்
காவலனாய் வாழ்ந்த எம் அருமை தந்தையே
ஆண்டு பத்து பறந்தோடிய போதும்
எம் துயரம் எம்மைவிட்டு அகலவில்லை!
நீங்கள் மறைந்த இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னே
எம் அன்னையையும் உமதண்டை அழைத்தீரே
இருவரும் இன்பமாய் பரகதியில் பரமனுடன் வீற்றிருக்க
பரலோகம் போனீரோ!
பாசமிகு தந்தையே பார்புகழ் போற்ற
பக்குவமாய் எமை வளர்த்த பண்பாளனே
உமை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் தனியாய் தவிக்கிறது
எங்கள் இதய புலம்பல் உறங்கிய உங்கள் காதில் கேட்டிடும்
சிறகுடைந்த பறவை போல் பரிதவிக்கின்றோம்
கடமைகள் முடிந்ததென கடவுளிடம் சென்றுவிட்டீர்
சோகமென நாம் மனம் துவண்ட போது சொப்பனத்தில் வந்து
எம்மைத் தேற்றுகின்ற விதம் என்ன என்பது
ஆண்டு பத்து ஆனலும் உங்கள் அன்புமுகம் வந்து வந்து
போவதின் மர்மம் என்ன? எம் உள்ளுணர்வு சொல்லவில்லை
எம்மை நீர் பிரிந்ததென்று
தனக்கென வாழாமல் எமக்கென வாழ்ந்தீர்கள்
சுமை தாங்கியாய் எமக்கு சுகம் தந்தீர்கள்
உங்கள் நினைவுகளின் சுவடுகள் எம் இதயத்தின் அழியாத சின்னம்
காலம் கடந்தாலும் உங்கள் வாழ்கை மரபுகளை சுவாசித்து
காலமெல்லாம் வாழ்கின்றோம் தவம் செய்தோம்
தந்தையாய் அடைய எதை நாம் தருவோம் உம்
அன்புக்கு ஈடாக
எம் அன்பு டடாவுக்கு ஆசை முத்தங்கள் பல கோடி
கனவிலும் நினைவிலும் நீரே எமது அன்புத்தெய்வம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக இறைவனை இரங்கி நிற்கின்றோம்!!!
“சீவியத்தில் நேசித்த உங்களை
மரணத்திலும் மறவோம்”
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
மக்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்கள்.
Seasons change, time moves on, but our memories never waver. Your spirit and legacy remains alive in our hearts, passed from one generation to the next, your values as our guiding principles. We...