5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நோர்வே Skjetten வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் அழகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற
எம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் விழியோரம்
நீர் சொரிய வைக்கின்றதேயம்மா...
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்!
அம்மா அம்மா என்று அழுகின்றோம்!
எங்கே சென்றீர்கள்? எங்கே மறைந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்