1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நோர்வே Skjetten வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் அழகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்