யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நோர்வே Skjetten வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் அழகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா
எங்கள் அருமை அம்மா
எங்கள் நினைவில் எந்நாளும் நிலைக்கும் அம்மா
கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப்
போனாலும்
எங்கள் முன்னே
உங்கள் முகம்
என் நாளும் உயிர் வாழும்
எண்ணங்கள் ஒவ்வொன்றாய்
வந்து வந்து போகுதம்மா
பூர்வீக நிலத்தில் பிடுங்கி எறிய
புலம்பெயர் தேசத்தில்
புது வாழ்வு தந்தாய்
பிள்ளைகளுக்கு
நாங்கள் சோர்ந்த வேளைகளில்
எங்கள் அருகில் வந்து
புதுத் தெம்பு தந்தீர்கள் அம்மா
இன்பத்திலும் துன்பத்திலும்
இரண்டறக் கலந்து
நின்றாய் அம்மா
சரியென பட்டதை
துணிந்து சொல்லும்
பக்குவம் தந்தாய் அம்மா
எல்லோரையும் மனம் உவந்து
வரவேற்கும் பண்பை தந்தாய் அம்மா
ஆண்டுகள் இரண்டு ஓடி
மறைந்தாலும் உங்களின்
நினைவுடன் என்றும் வாழும் பிள்ளைகள்....
உங்கள் ஆத்மா
இறைவனடியில்
அமைதியாக உறங்கட்டும்....
திருவடி சரணம் ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!