1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தாயனசிவம் அன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
தாயே உன் முழு முகம் மறைய!
முழு நிலா தோன்றிவிட்டது!
இனிமேல் உருகும் பொழுதிற்கு உறக்கமில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்