கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தாயனசிவம் அன்னம்மா அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விநாசித்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அமிர்தாயனசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தகுலராஜா, தர்மராஜா மற்றும் பரமராணி(இலங்கை), அன்னராணி(ஓய்வுபெற்ற பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை), அமுதராணி(சுவிஸ்), வரதராஜா(லண்டன்), விஜயராஜா(சுவிஸ்), நாகராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிதம்பரநாதன், டோமினிக்சர்வே(முன்னாள் ஆய்வுகூட கவனிப்பாளர்- யாழ். பல்கலைக் கழகம்), உமாதேவன்(சுவிஸ்), செல்வநாயகி(லண்டன்), இந்துமதி(சுவிஸ்), ஜோண் நெல்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அலன், அஜய், டென்சி, பெளசி, பிறீன்(HNB வங்கி உத்தியோகத்தர்), லவ்றாஜீன், சுதர்ஷினி, திலீப், பானுஜன், ராகவி, இந்துஜா, விதுஜா, இந்துஜன், தனுஜன், அனுஜன், எய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷானன், மீனாக்ஷி, லக்ஷ்மி, சுஜீன், சைரித், மகிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-08-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்