யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நண்பர்களின் சமர்ப்பணம்
அன்பு நண்பன் ஆனந்தகிருஷ்ணன் தணிகைக்குமரன் ( தனுஷ்)
நினைவின் நிழலில் — 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
நான்கு ஆண்டு கடந்தாலும் - நண்பா…
நேற்றே நீ வந்து சிரித்தது போலத்தான்
இதயம் இன்னும் உன்னை நினைக்கிறது
சில பாதைகள் வெறுமையானது
சில வார்த்தைகள் முடிவதற்கு முன்பே நின்றது
ஆனால், நீ விட்டுச் சென்ற
அன்பின் ஒளி மட்டும்
இன்றும் எங்களை வழி நடத்துகிறது
காற்றில் உன் குரல் கலந்து
நிசப்தத்தில்
உன் சிரிப்பு ஒலித்து
என்றும் நம்மோடு
நீ இருப்பதை
நினைவில் உணர்கிறோம்.
காலம் நகர்கிறது…
ஆனால் உன் நினைவு மட்டும்
ஒவ்வொரு நிமிடமும்
புதிய கண்ணீராகவும்
புன்னகையாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது.
உன் இடம் எங்கள் மனதில்
இன்னும்
வெறுமையாக இல்லை
உன் நினைவு அங்கே
நித்ய தீபமாக ஒளிர்கிறது
என்றும்
நினைவில் வாழும்
நண்பர்கள்
JP & S pvt ltd
College park and scrubs lane
உன் அன்பான அழைப்பும் பேச்சும் மனதின் ஓரமாய் பத்திரமாய் இருக்க நீ சென்று ஈராண்டு ஆனதுவே.. உன் நினைவுகளை நாம் சுமக்கின்றோம்.. அமைதி கொள்வாய் ???? அக்கா தமனி