யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!
எங்கள் வாழ்வுக்கு அர்த்தம் புகட்டியவனும் நீதான்
எங்கள் உயிருக்கு உணர்வு ஊட்டியவனும் நீதான்
நீ பேசிய வார்த்தைகள் போதுமடா
காலமும் கடந்து ஆண்டு ஒன்று ஆனது - ஆனாலும்
உன்கால் தடங்கள் மாறவில்லை
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!
என்றாவது ஒருநாள்
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!
உன் அன்பான அழைப்பும் பேச்சும் மனதின் ஓரமாய் பத்திரமாய் இருக்க நீ சென்று ஈராண்டு ஆனதுவே.. உன் நினைவுகளை நாம் சுமக்கின்றோம்.. அமைதி கொள்வாய் 🙏🏼🙏🏼 அக்கா தமனி