யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்த போதும்
ஈர விழிகளில் உன் நினைவுகள்
நிழலாடா, நிழற்படமோ
நிஜமென கதைபேச
இழந்து தவிக்கின்றோம்- நண்பா
நாடி வந்தோர் நலமறிந்து
நாளும் உதவிய நல்லவனே
கல்லையும் கசிய வைக்கும்
கனிவான உன் பேச்சு
களம் இழந்து தவிக்கின்றோம்- தனுஷ்
நட்பென்ற வார்த்தைக்கு
நாட்காட்டியாக இருந்தாய்
ஆசானாய், வழிகாட்டியாய், குடும்பத்தில்
அங்கத்தவானாய் ஆறுதல் வார்த்தை கூறி
ஆற்றிடுவாய் எம் துன்பமதை- நண்பா
பிரிவின் சோகம், வலி என்பதை
பிரிந்த பின் உன்னால் உணர்கின்றோம்
ஆண்டுகள் பல தொடர்ந்த நம் நட்பு
ஆறுதல் சொல்ல ஆளில்லாத வெறுமை
ஆற்றிடுமோ உன் நினைவுகளும்- நண்பா!!!
உன் அன்பான அழைப்பும் பேச்சும் மனதின் ஓரமாய் பத்திரமாய் இருக்க நீ சென்று ஈராண்டு ஆனதுவே.. உன் நினைவுகளை நாம் சுமக்கின்றோம்.. அமைதி கொள்வாய் 🙏🏼🙏🏼 அக்கா தமனி