Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 AUG 1949
மறைவு 20 OCT 2021
அமரர் அமிர்தலிங்கம் பிலோமினம்மா
வயது 72
அமரர் அமிர்தலிங்கம் பிலோமினம்மா 1949 - 2021 முதலியார்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பிலோமினம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கடவுள் நினைத்த போது கருவறை எனும் கனவுலகில்
 பக்குவமாய் சுமந்து உலகுக்கு
அறிமுகம் செய்தவள் எங்கள் அம்மா !!!!
 உருவம் தெரிந்திடாமல் வலி என்று தெரிந்தும்
 வரம் கேட்டு உலகுக்கு அறிமுகம் செய்த
 தெய்வம் தான் எங்கள் அம்மா!!!!!

ஈராண்டு புரண்டு ஓடினும்
அம்மா எம் நினைவுகளில் நீ
 என்றென்றும் குடிகொண்டிருக்கிறாய்..

அம்மா நாங்கள் எங்கே இருந்தாலும்
எப்படி இருந்தாலும் உன் நினைவுகள்
 மட்டும் மாறுவதில்லை .....
உன் புன்னகை பூத்த முகமும்
நீங்கள் காட்டிய நெறிமுறைகளும்
 எம்மை வாழவைத்துகொண்டிருக்கிறது இன்றுவரை...!!

நீ இல்லாமல் எம் வாழ்க்கை கடினம் அம்மா..!
நீ இல்லாத வாழ்க்கை வாழ்வில்லையம்மா !!!
 காலமெல்லாம் எம்மை சுமப்பவள் நீதான் அம்மா..!
பிறப்பில் என்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் சுமந்து ...!!!!

வளர்ந்தபின் என்னை மனதிலும் சுமந்தாய்
 வளர்ந்து என்ன தொழில் புரிய வேண்டுமென
கனவும் கண்டாய் கனவு பலித்த என் பிள்ளைகள்
 அரசாங்க வேலை என பெருமையுடன் ஊருக்கு
 அதனை பறையும் சாற்றினாய் ....

வாழ்க்கை எனும் தத்துவத்தை
வாரி தந்துவிட்டு நீங்கள் மட்டும் வாழாது
விண்ணுலகம் சென்றதேனம்மா????

அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட
 உங்கள் உதிரம் உள்ளவரை நீங்கள்
எம் ஒவ்வொருவரின் உயிருக்குள்ளும்
 உயிராக வாழ்வீர்கள் என்றும் எம்முடன்
 நாம் இவ்வுலகில் உள்ளவரை

காயங்கள் ஆறிப்போகும்
 கற்பனைகள் மாறிப்போகும்
கனவுகள் கலைந்துபோகும்-ஆனால்
என்றுமே கலைந்திடாது உங்கள் இழப்பம்மா....!!!

பிறப்புண்டு என்றால் இறப்பு உண்டம்மா
ஆனால் ஏனம்மா பாதியில் எமை விட்டு சென்றாய் ????
 பரிதவிக்கின்றோம்மா இன்றுவரை
அம்மா எமக்கொரு ஆசை அருகில் இருந்து
உங்கள் கையால் ஓரு பிடி உணவு உண்டிட
 வந்து தந்துவிட்டு போவீரகளாம்மா இல்லை
 நாங்கள உம்மிடம் வரும் வரை காத்திருக்கின்றீர்களா???
 சொல்லுங்களம்மா???
அம்மா நீங்கள் எம்மில் விதைத்து
 சென்ற நல்ல எண்ணங்களோடு பயணிக்கின்றோம்
 உம் நினைவு சுமந்து என்றுமே....!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம் என்னாளும்...

தகவல்: பிள்ளைகள்-சுசிலா(சுவிஸ்),மோகன்(பிரான்ஸ்),ரஞ்சன்(ஆசிரியர்- இலங்கை) மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்

Photos