வவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பிலோமினம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அம்மா....நீ
உயிர் தந்தாய்
உடல் தந்தாய்
உண்ண உன் உதிரம் தந்தாய்
பாதுகாக்க உன் அணை தந்தாய்
நோய் என்றால் துடித்துப் போனாய்.....
வலி என்றால் வாடிப் போனாய்
பசி என்றால் பல கதைகள்
சொல்லி உணவூட்டினாய்
நடை பழக கை பிடித்தாய்
தடக்கி விழுந்த போது
தாவிப் பிடித்தாய்..
வளர்ந்த பின் வாழ கற்றுத் தந்தாய்
ஆனால்........
காலனின் கண்களில் -உன்
அழகிய மேனிபட்டு
கவர்ந்து சென்று விட்டான்-எமை
காலமெல்லாம் பரிதவிக்கவிட்டு
ஆனாலும்
காலமெல்லாம் காத்திருப்போம்
உனை
மீண்டுமொருமுறை தாயாக
அடையும் வரை....
அம்மா உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....
தினம் தினம்
இவ்வண்ணம்
பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்....
எங்கள் அன்னையின் இழப்பு அறிந்து நேரிலும், தொலைபேசி வழியாகவும் ஆறுதல் கூறிய அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகுக.