வவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பிலோமினம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா நீங்கள் எமக்கு
தாயாக, தந்தையாக, நல் ஆசானாக,
கடவுளாக கிடைத்த பொக்கிசம்
அதை தொலைத்து ஆறிரண்டு மாதம்
இன்றெனினும் ஆறாத்துயரத்தோடு
பயணிக்கின்றோம்...
உமது நினைவுகள் சுமந்து இந்நாள் வரை!!!!
எங்கே அம்மா சென்றாய்???
எமை பாரினில் தவிக்க விட்டு
உம்முகம் இன்னொரு தடவை
பார்க்க பரிதவிக்கின்றோம்
பார்க்க மாட்டாயா?
பகலிரவாய் பாசமாய் வளர்த்த
உன் பிள்ளைகளை!!!
பாசம் காட்டிய
உம் பேரப்பிள்ளைகள்
எப்போ
நீங்கள் வருவீர்கள் என்கின்றார்கள்?
என்னம்மா கூற அவர்களிடம்?
வர மாட்டீர்கள் என்றுரைத்தால்
வாடி விடுவார்களம்மா
வந்து ஒரு தடவை பார்த்து விட்டு
போங்களம்மா???
அம்மா உம் புன்னகை பூர்த்த
சிரிப்பு, யாரையும் தீண்டாத பேச்சு
நல் அறிவுரைகள்
இவை எல்லாம்
தந்திட எப்போ வருவாயம்மா?
ஊரார் கேட்கின்றார்கள்
உறவுகள் கேட்கின்றார்கள்
எப்போ வருவீர்கள் என்று
நீங்கள் நிரந்தர உறக்கத்தில்
இருப்பது அறியாமல்
என்னம்மா கூறிட அவர்களிடம்!!!
அம்மா உங்கள் முத்துக்கள் மூன்று கேட்கின்றோம்
முடிந்தவரை விரைந்து வாருங்களம்மா முடியவில்லை
எம்மால் உமை விட்டு பிரிந்திருக்க!!!
அம்மா இயற்கையின் நியதியில்
நாமும் உம்மோடு வந்து என்னாளும்
வாழ துடிக்கின்றோம் அம்மா!!!!
அதுவரை உம் நினைவோடும்
நீர் காட்டிய நல்வழியிலும் வாழ்கின்றோம்
கலங்கிடாதே
அம்மா காலமெல்லாம்
நாம் உம் நினைவுகள் சுமந்து
வாழ்கின்றோம்
காலமுள்ளவரை???
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்...