30ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அமலவிஜி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
தகவல்:
அல்போன்ஸ் அமலராஜன்(அண்ணா- லண்டன்)