28ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அமலவிஜி அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு இருபத்தெட்டு ஆண்டுகள்
சென்றாலும் மாறாது எம் துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்
எம்வாழ்க்கைத் தேரின் அச்சாணியே.!
விதியின் விளையாட்டோ..?
நீங்கள் எம்மைவிட்டு பிரிந்துவிட்டீர்
நடுக்காட்டில் தவிக்கவிட்ட பேதைகள்போல்
தவிக்கின்றோம் உம்பிரிவால்...
நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் விம்முகிறது..
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம்நினைவு..
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்..
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் உங்கள் அன்பு அண்ணா!
தகவல்:
அல்போன்ஸ் அமலராஜன்(அண்ணா- லண்டன்)