யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அமலவிஜி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பிரியமே
விஜி குட்டி!
எங்களை விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டு
தூரப்போனதும் ஏனம்மா?
பெற்ற தாய் கலங்கித்தவிக்க
உன்னைத்தெய்வமாய்த்தூக்கி
வளர்த்த உன் தந்தை கதறிப்புலம்ப
கண்ணின் மணி போன்ற
அண்ணா, அண்ணி, அக்காமார்கள், அத்தான்மார்கள்
துயரில் உடைந்து போக!
எங்கள் இதயத்தில்
காவிய தீபமாய் நீ இருக்க
நிலவாய் வானில் சென்றதேனம்மா?
உனை இழந்து இருபத்தி ஐந்து வருடங்கள்
கடந்து விட்டன ஆனால் உன்
முகமும் நினைவுகளும் எங்களின் மனதில்
என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா..!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
நீ கானல் நீராய்ப் போயினையோ?
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
உன் நினைவோடே...!
என்றும் உன் ஆத்மா சாந்திக்காகப் இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.