
கண்ணீர் காணிக்கை -------------------------------------------- செல்வன் என்ற அழகு வதனன் மொழி இழந்தான் ஒளி இழந்தான் உற்றவரும் நற்றவரும் ஊரவரும் தவித்திருக்க காலன் மீது காதல் கொண்டு பறந்து சென்றதேனோ கார் மேகம் மழையால் பூமியை நனைக்க மனைவி மக்கள் கண்ணீர் தெளிக்க பூமாலைகள் வாடி வதங்க பூமியில் உருண்ட உயிர் பருமன் தெரியாமல் மெதுவாக விடைபெற்றதேனோ செல்வன் என்னும் செழிப்பு பொலிவிழந்து பேச்சிழந்து சிரிப்பு இழந்து நாவடங்கி எம்மை எல்லாம் அட்ட நாடிகளும் செயல் இழந்து விழி பிதுங்கி நிற்க வைத்து விடை பெற்றதேனோ காலன் மீது கொண்ட காதலோ வாழ்வு மீது கொண்ட கோபமோ பிறப்பவர் எல்லாம் இறப்பார் என்ற இயற்பியலின் நீரூபணத்தை நிஜம் என்று மீண்டும் ஒரு முறை உனது மரணம் நீரூபித்து விட்டது அமைதி கொள் ஆண்டவன் திருப்பாதங்களில் துயில் கொள் அழகு செவ்வனே அன்பு செவ்வனே அமைதி கொள்... ஓம் சாந்தி ? ????????????????????????????
