5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யுவறாஜன் நகுலேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவின் தவிப்பு
ஆண்டு ஐந்து ஆனது இன்று
உம்மை இழந்து இவ்வுலகில்
நினைத்துப் பார்க்கும் முன்னே
நினைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றேன்
என் அன்பு மகனே!
சகோதர, சகோதரிகள்
உன் சகோதரர்கள் ஏற்றமுடன் வாழ
ஏணியாய் நின்றாயோ... நீர் எம்மை விட்டு
அகலவில்லை நீர் எம்முடன் இருந்த
நினைவலைகள் வாட்டி வதைக்கின்றன!
எங்கள் அன்பு சகோதரனே...
பிள்ளைகளின் நினைவலைகள்.
அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஐந்து ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
உங்கள் பிரிவால் வாடும் அம்மா, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்.
தகவல்:
குடும்பத்தினர்