யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யுவறாஜன் நகுலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனது இன்று
உனை இழந்து இவ்வுலகில்
நினைத்துப் பார்க்கும் முன்னே
நினைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றேன்
என் அன்பு மகனே!
கட்டிய மனையாள் கலங்கி நிற்க- நீ
கண்காணாத தேசம் சென்றதேனோ? - நீர்
பெற்ற பிள்ளைகள் பாசத்துக்கு ஏங்கி நிற்க- நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
பிள்ளைகளின் பாசம் என்றால் அது
நீயல்லவே... உன்னிடம் அல்லவா அந்த
படிப்பினையை நாங்கள் கற்றுண்றோம்
மறக்க முடியாது உன் பாசப்பிணைப்பை!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
உன் சகோதரர்கள் ஏற்றமுடன் வாழ
ஏணியாய் நின்றாயோ... நீர் எம்மை விட்டு
அகலவில்லை நீர் எம்முடன் இருந்த
நினைவலைகள் வாட்டி வதைக்கின்றன!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உன் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாமல் சென்றுவிட்டாயே!
எம் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளுடன் வாழும்!
அப்பா, அம்மா, சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள்.