Clicky

தோற்றம் 07 SEP 1954
மறைவு 14 MAR 2026
திருமதி யோகேஸ்வரி மகாதேவா 1954 - 2026 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
… அம்மம்மாவின் நினைவில் … கோபம் என்ற வார்த்தையே உங்கள் மனதில் பிறக்காதது… எப்போதும் சிரித்த முகம், அன்பாகப் பேசும் குரல் – அதுவே உங்கள் அடையாளம். நான் வீட்டிற்கு வந்தாலே “வா இரு…” என்று அழைத்து முதலில் ஒரு டீயும், பிஸ்கட்டுகளும் வைத்து அன்போடு உபசரித்த அந்த நிமிடங்கள் இப்போது நினைவாக மட்டும் தான்.😢 ஒரு அம்மாவைப் போல அல்ல, அம்மாவாகவே என்னை அன்புடன் கவனித்துக் கொண்டீர்கள்… என் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பாசம் அதுதான். விபத்தால் என் உடல் பலவீனமாய் இருந்த நாட்களில் என் அருகிலேயே இருந்து அக்கறையுடன் பார்த்துக் கொண்ட உங்கள் அந்த அன்பு என் உயிரில் என்றும் நிலைத்திருக்கின்றது. “நலம் தானே?” என்று தினமும் கேட்ட உங்கள் குரல் இப்போது கேட்காமல் போனாலும் என் இதயத்தில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.😢😢 அம்மம்மா… நீங்கள் விட்டுச் சென்ற அன்பு நிறைந்த நினைவுகள் என் வாழ்வின் பொக்கிஷம். உங்கள் ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்… என்றும் உங்கள் அன்பைப் நினைத்து கண்ணீருடன்😢 நிற்கும் உங்கள் பேரன். _குகா
Write Tribute