Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 07 SEP 1954
மறைவு 14 MAR 2026
திருமதி யோகேஸ்வரி மகாதேவா 1954 - 2026 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி மகாதேவா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
 எம் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புடன் அழகாக வாழ்ந்த உன்னை
 ஈசன் இரக்கமில்லாமல் அழைத்துச் சென்றானே!

 அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற மூன்று முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!

 முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!

 உங்கள் ஆத்ம சாந்திக்காக
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 11-04-2026 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும் பின்னர் வீட்டுக்கிரியைகள் 13-04-2026 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில்(யா/கொக்குவில் ) நடைபெறும் . அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிற்க்கும் வண்ணம் அன்புடன் அழைக்கி்ன்றோம். 

வீட்டு முகவரி:
இல. 50, பிரம்படி வீதி,
கொக்குவில் கிழக்கு
கொக்குவில் 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாதேவா - கணவர்
புனிதமலர் - மகள்
மகாயோகன் - மகன்
சிவநேசன் - மகன்
சிவநேசன் - மகன்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.