

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் களபூமியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Hoogeveen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரன் யோகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:20/07/2022
ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை
எம் துயரம்
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே
நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம்
தினமும்
திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டிரே
எங்கள்
இதயதுடிப்பில் அன்பு
கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது
போல் உணர்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக
இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம்
உறவுகள் அணைத்திட
இருந்தாலும்
உம்மை
போன்று அன்பு காட்ட
யாரும் இல்லையம்மா...
அன்பால் என்றும் எத்தனை
ஆண்டுகள்
ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்