4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்த அன்னையே!
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை...
நான்கு ஆண்டுகள் கடந்தும்
உன் நினைவது எமை விட்டு அகலாமலே
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
கடைசிவரை இருப்பாய் என்று மறந்து விட்டேன்
வாழ்வை அன்று கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்...
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்