3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அம்மா உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்.
ஒளிவிளக்கின் வடிவே எங்கே?
அணைந்திடாத தீபம் எங்கே?
அம்மா உன் நினைவாலே வாடுகின்றோம்.
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நினைத்துக்கொண்டே இருக்கும்.
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு கணவர், பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்